தான் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் இளைய தளபதி விஜய்.
பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் கடந்த 1992ஆம் ஆண்டில் கதாநாயகனாக அறிமுகமானார்.
கொலிவுட்டில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது, மொத்தம் 53 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
எனவே தனது 20ஆம் ஆண்டை நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினாராம்.
ஏ.எல் விஜய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது, நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் கேக் வெட்டி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாராம்.
மேலும் தன்னுடன் நடிக்கும் அமலா பால், இயக்குனர் விஜய்க்கு கேக்கை ஊட்டி மகிழ்ந்தாராம்.
Read34 times!