குதிகால் நரம்பை அறுக்கும் குரூரர் பாலா!



உலக டெரருக்கெல்லாம் ஒட்டுமொத்த ‘மிரர்’ ஆக விளங்கி வருபவர் டைரக்டர் பாலாதான். ஒரு ஃபைட் சீன் என்றால் கூட ரசிகர்களாகிய நமக்கே காயம் படுகிற அளவுக்கு காட்டுகிற காட்சி சித்தர் அவர். நந்தாவில் துவங்கி, அவன் இவன் வரைக்கும் பாலா படத்தின் ஃபைட் சீன்களுக்கு பலத்த வரவேற்பு இருக்கும்.
பிச்சைக்காரர்கள் வாழ்வில் நடக்கும் கொடூரங்களை காட்டி நம்மை நான் கடவுள் படத்தில் கலங்கடித்த பாலா, தற்போது இயக்கி வரும் பரதேசி படத்திலும் அதே மாதிரி கலங்கடிக்கப் போகிறார். எப்படியாம்?
கொத்தடிமையாக சிக்கிக் கொண்டு அவதிப்படும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதையல்லவா? இதில் தப்பி ஓடும் கொத்தடிமைகளை பிடித்து வந்து அவர்களின் குதிகால் நரம்பை அறுக்கிற காட்சி ஒன்று இடம் பெறுகிறதாம். இதை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறாராம் பாலா. வன்முறையின் உச்சம் என்று இந்த காட்சியை வர்ணிக்கிறார்கள் படத்தை அரசல் புரசலாக பார்த்தவர்கள்.

Read24 times!

Leave a Reply