காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள துணை ராணுவ முகாம் தாக்குதலோடு தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நபர், இந்த தாக்குதல் திட்டம் குறித்த பல தகவல்களை தெரிவித்ததாக, பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த நபர் தெரிவித்த தகவல்களை அடுத்து, தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள தற்கொலைப்படை தீவிரவாதிகள் மற்றும், அவர்களுக்கு உதவும் உள்ளூர் வாலிபர்கள் சிலரை தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கிரிக்கெட் வீரர்கள் வேடத்தில் நுழைந்து, அங்குள்ள துணை ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் துணை ராணுவத்தினர் 5 பேர் பலியாகினர். தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகள் 2 பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்த மறுதினம், இந்த தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த நபர் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அபு டால்ஹா என்ற பெயரில் அறியப்பட்ட இந்த நபரின் நிஜ பெயர், ஜூபைர்அகமது. இவர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய நபர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
ஸ்ரீநகர் சட்டபால் பகுதியில் உள்ள ஒரு பார்வையங்ஙவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நபரிடம் செய்யப்பட்ட விசாரணையின்போதே பல தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
கிடைத்த தகவல்களின்படி, இந்த அபு டால்ஹா, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்ட 9 தீவிரவாதிகள் குழுவுக்கு இவர்தான் தலைவர். …அடுத்த பக்கம் வாருங்கள்
Read115 times!